புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 ஜூன் 2021 (16:34 IST)

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி குறித்த முக்கிய அறிவிப்பு!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி குறித்த முக்கிய அறிவிப்பு!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறாது என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெறும் என ஐஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
 
மேலும் உலக கோப்பை டி20 போட்டிகள் தொடங்கும் தேதி அக்டோபர் 17 என்றும் இறுதிப் போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டியும் நடைபெறும் தேதி மற்றும் ஒவ்வொரு நாளும் எந்தெந்த அணிகளுக்கிடையிலான போட்டி என்பது குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது 
 
மேலும் இந்த போட்டிகள் சார்ஜா, அபுதாபி, துபாய் மற்றும் ஓமன் ஆகிய நான்கு மைதானங்களில் நடைபெறும் என்றும் முதல் சுற்றில் எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி உறுதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்