1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 13 ஜூன் 2024 (14:43 IST)

ஊடக அணிகளுக்கு இடையிலான மீடியா டிராஃபி கிரிக்கெட் போட்டியின் நான்குவது ஆண்டு போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்!

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் சன் டிவி, கலைஞர் டிவி, ரேடியோ சிட்டி, விகடன் உள்பட 13 ஊடக அணிகள் பங்கேற்று உள்ளன. 
 
3 நாட்கள் நடைபெறும் போட்டியில் முதல் இடத்தை பிடிக்கும் அணி 50 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட உள்ளது.
 
ஊடகவியலாளர்களின் மனச்சோர்வை போக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். 
 
வரும் 15-ம் தேதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.