1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified புதன், 14 செப்டம்பர் 2022 (17:56 IST)

இந்தியாவில் உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி: தேதி அறிவிப்பு!

football
இந்தியாவில் உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்த கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது
 
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தற்போது இந்த போட்டியை நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி அக்டோபர் 11-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
சமீபத்தில் சென்னையில் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகள் நடந்தது என்பதும் தற்போது சென்னையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து உலக கோப்பை கால்பந்து போட்டியும் இந்தியாவில் நடைபெற உள்ளது