இந்திய பணக்காரர் பட்டியலில் முதலிடம்.. அதானியை பின்னுக்குத்தள்ளிய அம்பானி..!
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில மாதங்களாக அதானி இருந்த நிலையில் தற்போது அதானியை பின்னுக்கு தள்ளிவிட்டு அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 8,08,700 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.
ரூ.4.7 லட்சம் கோடி ரூபாயுடன் கௌதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பதும் சைரஸ் பூனாவாலா 2.7 லட்சம் கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக கௌதம் அதானி நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவு குறைந்ததன் காரணமாக அவரது சொத்து மதிப்பு படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில் தற்போது அவர் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதை அடுத்து அதானியின் சொத்து மதிப்பை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அம்பானியின் சொத்து மதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva