1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (13:21 IST)

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்!

உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
2022ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டில் உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் மார்ச் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் வீராங்கனைகள் மோத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர் கொண்டது என்பதும் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்ததும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய ஆண்கள் அணி பெற்ற தோல்விக்கு பழிவாங்கும் வகையில் இந்திய பெண்கள் அணி பாகிஸ்தானை வீழ்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்