ஞாயிறு, 1 பிப்ரவரி 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Ravivarma
Last Updated : புதன், 2 ஜூலை 2014 (18:57 IST)

விம்பிள்டன் டென்னிஸ்: 37 ஏஸ்கள், 2ஐ தோற்கடித்த 144

விம்பிள்டன் டென்னிஸ்: 37 ஏஸ்கள், 2ஐ தோற்கடித்த 144
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள ரஃபேல் நடாலை தோற்கடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளார் உலகத் தரவரிசையில் 144ஆவது இடத்தில் உள்ள ஆஸ்ட்ரேலிய இளம் வீரர் கிர்ஜியஸ். 
முதல் செட்டையே டை-பிரேக்கர் வரை இழுத்து 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் செட்டை (7-6) வென்றார் கிர்ஜியஸ். 2வது செட்டில் சுதாரித்த நடால் 7-5 என்ற கணக்கில் செட்டை தனதாக்கினார். 
 
ஆனால், 3வது செட்டும் டை-பிரேக்கருக்குச் சென்றது. இதிலும் 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் செட்டை (7-6) கைப்பற்றினார் கிர்ஜியஸ். 
 
4வது செட்டில் அதிரடியாக சர்வ்களை வீசி நடாலை திணறடித்த கிர்ஜியஸ், அவர் சுதாரிப்பதற்குள் 6-3 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி, 7-6 (7-5), 5-7, 7-6 (7-5), 6-3 என்ற செட்கள் கணக்கில் நடாலை அதிரடியாக வென்றார் கிர்ஜியஸ். 
 
இந்தப் போட்டியில் மட்டும் 37 ஏஸ்களை அடித்து நடாலை திணறடித்தார் கிர்ஜியஸ் என்பது குறிப்பிடத்தக்கது.