புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:35 IST)

பாண்டிங்கின் சாதனையை தகர்ப்பாரா கோலி?

இந்திய அணியின் கேப்டன் கோலி இன்று பாண்டிங்கின் சாதனையை தகர்ப்பதற்கான வாய்ப்புள்ளது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கு கேப்டன் கோலி மீண்டும் வந்துள்ளார். அவர் இந்த போட்டியில் சதம் அடிக்கும் பட்சத்தில் கேப்டனாக 42 சதங்கள் அடித்து இதற்கும் முன்னர் அதிக சதங்கள் அடித்திருந்த ஆஸி கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை தகர்ப்பார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகமாக போட்டிகள் இல்லாததாலும், கோலியின் மோசமான பார்ம் காரணமாகவும் அவர் சதம் எதுவும் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.