IPL போட்டிகள் ரத்தாகுமா ? பிசிசிஐ பரபரப்பு தகவல் !
வருடம் தோறும் மார்ச் மாதம் ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும். ஆனால், இந்த வருடம் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பெரும்பாலான நாடுகள் பாதிப்படைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளிடையே நடைபெற்ற போட்டிகளுக்கு கூட மைதானத்தில் இல்லாமலே நடைபெற்றது.
இந்த நிலையில், இந்தியாவில் 5 பேருக்கு மேல் மக்கள் கூட்டம் கூடக் கூடாது என மத்திய அரசு அறித்துள்ளதால் மார்ச் 29 ஆம் தேதி நடைபெற வேண்டிய13 வது ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில்,. இந்தியாவில் 1071 பேர் பாதிப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை முழு ஊரடங்கில் உள்ளதால் ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், வரும் ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்படும். அதேசமயம் நாட்டில் நிலவும் சூழல் குறித்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.