1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (19:41 IST)

2வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பந்துவீச முடிவு!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் சற்று முன் மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளார். இதனை அடுத்து இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது.
 
இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பின்வருமாறு: கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், புஜாரே, விராத் கோஹ்லி, ரஹானே, விஹாரி, ரிஷப் பண்ட் ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, ஷமி, பும்ரா
 
இந்த போட்டியில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பின்வருமாறு: பிரெத்வெயிட், கேம்பெல், புரூக்ஸ், பிராவோ, சேஸ், ஹெட்மயர், ஹோல்டர், ஹாமில்டன், கார்ன்வால், ரோச், கேப்ரியல்
 
ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இந்த டெஸ்டில் வெல்லுமா? அல்லது இந்த டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணிகள் வென்று தொடரை சமன்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்