திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (17:03 IST)

இனி படம் இப்படித்தான் இருக்கும்... மகளுக்காக ரூட்டை மாற்றிய அஜித்!!

நடிகர் அஜித்குமார் தனது மகளுக்காக இனி படங்களில் எப்படி நடிக்க வேண்டும் என்பதில் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளாராம். 
விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த அஜித்குமார் இதனை தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்துக்காகத் தயாராகி வருகிறார். 
 
போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் வரும் அஜித், இந்த படத்தில் முழுக்க இளமைத் தோற்றத்தோடு வர இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 
 
அதோடு அஜித் தனது மகளுக்காக இனி பெண்களுக்கு எதிரான எந்த ஒரு கேலி, கிண்டல் காட்சியும் தனது படங்களில் இருக்கக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறாராம்.
அஜித் இந்த முடிவை தனது வளர்ந்து வரும் மகளுக்காக எடுத்ததாக கூறப்பட்டாலும், இது சரியான முடிவே என்று பலரும் அஜித்தை பாராட்டி வருகின்றனர்.