1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 14 அக்டோபர் 2020 (14:51 IST)

பியூஷ் சாவ்லாவை இறக்கியதற்கு இதுதான் காரணமா? ஆச்சரிய தகவல்

பியூஷ் சாவ்லாவை இறக்கியதற்கு இதுதான் காரணமா?
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 7 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. ஏற்கனவே தீபக் சஹர், கரண் சர்மா, சாம் கர்ரன், பிராவோ, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் ஆகிய 6 பந்துவீச்சாளர்கள் இருந்த நிலையில் ஏழாவதாக பியூஷ் சாவ்லாவும் நேற்று களமிறக்கப்பட்டார்
 
7 பந்து வீச்சாளர்களுடன் சென்னை அணி களம் இறங்குவதை பார்த்ததும் ஹைதராபாத் அணி மிகுந்த ஆச்சரியம் அடைந்தது. இந்த நிலையில் நன்றாக விளையாடிய ஜெகதீசனுக்கு பதிலாக பியூஷ் சாவ்லா களமிறக்கப்பட்டது ஏன் என்றும் சென்னை ரசிகர்களுக்கும் கேள்வி எழுந்தது
 
ஏனெனில் பியூஷ் சாவ்லா 15 ஓவர்கள் வரை பந்துவீச அழைக்கப்படவில்லை., அதனை அடுத்து 16வது ஓவரை மட்டுமே வீசினார் என்பதும் அதன் பின்னர் அவர் பந்துவீசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
எதிரணி பேட்ஸ்மேன்கள் பியூஷ் சாவ்லா வந்தவுடன் அடித்து ஆடி கொள்ளலாம் என்றும் அதுவரை பொறுமையாக ஆடி கொள்ளலாம் என்று நினைக்க வைத்த தோனி கடைசி வரை அவரை இறக்காமல் ஒரே ஒரு ஓவரை மட்டும் பந்துவீச செய்து எதிரணியினரின் எதிர்பார்ப்பை ஏமாற்றினார் என்றும் தோனியின் நேற்றைய தந்திரங்களில் இதுவும் ஒன்று என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்