புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (08:49 IST)

ஸ்ரேயாஸ் அய்யர் காயம்: டெல்லி அணியின் புதிய கேப்டன் யார்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் புனே நகரில் நடந்த போது அந்த போட்டியில் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் எதிர்பாராதவிதமாக காயமடைந்தார். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் நான்கு மாதங்கள் கிரிக்கெட் விளையாட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது
 
இதனால் அடுத்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக நான்கு வீரர்கள் கேப்டனாக பரிசீலனை உள்ளதாக கூறப்படுகிறது
 
அஸ்வின், ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய நால்வரில் ஒருவர் கேப்டனாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன