திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 மார்ச் 2021 (14:05 IST)

தோனியின் சாதனையை சமன் செய்த ஆப்கன் கேப்டன்!

இந்திய அணியின்  முன்னாள் கேப்டன் தோனி டி 20 போட்டிகளில் நிகழ்த்திய சாதனையை ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் சமன் செய்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இந்தியாவை டி 20 போட்டிகளில் 73 முறை தலைமை தாங்கி 41 போட்டிகளில் வெற்றி பெறவைத்திருந்தார். இதுவே ஒரு அணிக்கேப்டன் தன் தலைமையில் பெற்ற அதிக வெற்றியாக இருந்தது. இந்நிலையில் இப்போது அதை ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்கர் அப்கன் சமன் செய்துள்ளார். அவர் இதுவரை 51 போட்டிகளில் தலைமை தாங்கி 41 போட்டிகளை வென்றுள்ளார். தோனியை விட இவரின் வெற்றி சதவீதம் அதிகம்.

மூன்றாவது இடத்தில் மோர்கன் உள்ளார்.