தவானுக்குப் பதில் ரிஷப் பண்ட் – ஒப்புதல் அளித்த ஐசிசி !

Last Modified வியாழன், 20 ஜூன் 2019 (10:25 IST)
உலகக்கோப்பைத் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ள தவானுக்குப் பதிலாக ரிஷப் பண்ட்டை இணைத்துக்கொள்ள ஐசிசி தொழில்நுட்பக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடியபோது அருமையாக விளையாடிய தவான், அந்த போட்டியின் இடையே காயம் அடைந்தார். இருப்பினும் அவர் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் மட்டும் ஆடமாட்டார் என்றும், அதன்பின் அணியில் மீண்டும் இணைந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் தவானுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடைய நாட்களாகும்  என்பதால் அவர் உலகக்கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவானின் விலகலால் அணிக்கு பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக பிசிசிஐ சார்பில் ரிஷப் பண்ட் லண்டனுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
 
தவானின் விலகலால் மாற்று வீரராக ரிஷப் பண்ட்டை இணைத்துக்கொள்ள பிசிசிஐ, ஐசிசியின் தொழில் நுட்பக்குழுவிடம் ஒப்புதலுக்காகக் காத்திருந்த நிலையில் நேற்று ரிஷப் பண்ட்டை இந்திய அணியுடன் இணைத்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :