1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 1 மார்ச் 2023 (19:15 IST)

ஆஸ்கர் விருது விழாவில் 'நாட்டுக்குத்து' பாடல்.... படக்குழுவினர் மகிழ்ச்சி

ஆஸ்கர் விருது விழா மேடையில்  ஆர்.ஆர்.ஆர் பட பாடல்  நேரலையாக அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து  2022 ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்  சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தை ஆஸ்கர் விருது விழாவின் அனைத்து பிரிவுகளிலும் இப்படம் கலந்து கொண்டது.

ஆனால், இப்படம் ஆஸ்கருக்கு தேர்வாகாத நிலையில், ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தில் கீரவாணி இசையில் இடம்பெற்ற நாட்டுக்குத்து பாடல் தகுதிபெற்று, கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில், ஆர்.ஆர்.ஆர். படத்தின் இடம்பெற்ற  நாட்டுக் குத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் விருது வென்றது.

இப்பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்பது இந்தியர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்கர் விருது விழா மேடையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்பட நாட்டு நாட்டு பாடலை லைவ் ஆக அரங்கேற்றம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.


வரும் மார்ச் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த பாடலுக்கான போட்டியிலும், நாட்டு நாட்டு பாடல் பங்கேற்றுள்ள நிலையில், இப்பாடலை, ராகுல் சிபிலிகஞ், கால பைரவா ஆகிய இரு பாடகர்களும் பாடவுள்ளனர்.

நாட்டுக்குத்துப் பாடலுக்கு கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரபோஸ் பாடல் எழுதியுள்ளார். ராகுல், காலா ஆகியோர் பாடியுள்ளனர். பிரேம் ராக்ஷித் இப்பாடலுக்கு  நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.