1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 29 ஜனவரி 2022 (16:01 IST)

பொல்லார்ட் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்… முன்னாள் கேப்டன் நம்பிக்கை!

இந்தியா வந்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாட உள்ளது.

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையிலான டி20  கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இந்த தொடரில் கலந்துகொள்ள இருக்கும் இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தொடர் குறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி  பொல்லார்ட் இந்திய அணிக்கு சவாலான வீரராக இருப்பார் எனக் கூறியுள்ளார். அதில் ‘பொல்லார்ட் அதிகமாக இந்தியாவில் போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றவர். அதுபோல அவருக்கு இந்திய வீரர்களின் மனநிலையும் தெரியும். அந்த அனுபவம் அவருக்குக் கைகொடுக்கும்’ எனக் கூறியுள்ளார்.