திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 ஜனவரி 2022 (16:34 IST)

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை தொடர்களுக்கான வர்ணனையாளர்கள் அறிவிப்பு!

இந்திய அணி ஐபிஎல் தொடருக்கு முன்பாக விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கான எதிரான தொடர்களுக்கான இந்தியாவைச் சேர்ந்த வர்ணனையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டி மற்றும் இலங்கை தொடர் ஆகியவற்றில் ஐபிஎல் க்கு முன்பாக விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய வர்ணனையாளர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 7 பேரில்  சுனில் கவாஸ்கர், அஜித் அகர்கர், இயன் பிஷப், எல் சிவராமகிருஷ்ணன், ஹர்ஷா போக்லே, முரளி கார்த்திக் மற்றும் தீப் தாஸ்குப்தா ஆகியோர் அடங்குவர். சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய ரவி சாஸ்திரி வர்ணனையாளர் குழுவில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.