செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2019 (09:25 IST)

2வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்று பேட்டிங் செய்ய இந்தியா முடிவு

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று புனே நகரில் நடைபெற உள்ளது

இந்த போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்

இதனை அடுத்து இரண்டு அணிகள் விளையாடும் 11 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால், விராட் கோலி, ரஹானே, சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகிய 11 பேரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியில் விஹாரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் தென்னாபிரிக்க அணியில் மார்க்கம், எல்கர், புரூன், பவுமா, டூபிளஸ்சிஸ், டீகாக், முத்துச்சாமி, ஃபிலண்டர், மஹாராஜ், ரபடா மற்றும் நார்ட்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்