இன்று இரண்டாவது டெஸ்ட்: இந்தியாவின் வெற்றி தொடருமா?

Last Updated: வியாழன், 10 அக்டோபர் 2019 (08:00 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் மயாங்க் அகர்வால் முதல் இன்னிங்ஸில் அடித்த இரட்டை சதம் மற்றும் ரோஹித் சர்மா இரண்டு இன்னிங்ஸ்களிலும் அடித்த சதம், அஸ்வினின் அபார பந்துவீச்சு ஆகியவை இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக இருந்தது

இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்டில் வெற்றி, சொந்த நாட்டில் போட்டி நடைபெறுவது ஆகியவை இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. அதேபோல் மயாங்க் அகர்வால், ரோஹித் சர்மாவின் ஓப்பனிங் வலுவாக இருப்பதால் முதலில் பேட்டிங் செய்தால் 400 ரன்களை இந்தியா அசால்ட்டாக கடந்துவிடும். மேலும் புஜாரே, கோஹ்லி, ரஹானே, ஜடேஜா ஆகிய பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் உள்ளனர்.

அதேபோல் அஸ்வின், சஹா, விஹாரி, ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் பந்துவீச்சில் ஃபார்மில் இருப்பதால் இந்திய அணியின் வெற்றி தொடர அதிக வாய்ப்பு உள்ளது


samy
இருப்பினும் தென்னாப்பிரிக்கா அணியை குறைத்து மதிப்பிட முடியாது. முதல் போட்டியில் எல்கர் 160 ரன்கள் எடுத்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தார். அதேபோல் டீகாக் 111 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும் மார்க்கன், பவுமா, புரூன், பியடிட் ஆகிய பேட்ஸ்மேன்களும் இன்றைய போட்டியில் ரன்மிஷின்களாக மாற வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை


இதில் மேலும் படிக்கவும் :