1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 3 டிசம்பர் 2021 (07:28 IST)

இன்று 2வது டெஸ்ட் போட்டி: விராத் கோஹ்லி சாதனை படைக்க வாய்ப்பு!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் இன்று இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் விராத் கோலி இன்று சாதனை படைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இதுவரை டெஸ்ட் போட்டியில் கேப்டனாக 41 சதங்கள் அடித்துள்ளார். அதேபோல் விராத் கோலியும் இதுவரை கேப்டனாக 41 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தால் உலக அளவில் கேப்டனாக அதிக சதம் எடுத்தவர் என்ற மிகப்பெரிய சாதனை விராட்கோலி வசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை மும்பையில் இன்று விராட்கோலி நிகழ்த்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்