அவர் மட்டும் ஃபார்முக்கு வந்து விட்டால் கட்டுப்படுத்துவது என்பது முடியாது… கோலி பாராட்டு!
மிஸ்டர் கிரிக்கெட் என அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் குறித்து ஆர் சி பி அணியின் கேப்டன் பெருமையாகப் பேசியுள்ளார்.
வழக்கம் போல இல்லாமல் இந்த ஆண்டு ஆர் சி பி அணி மிகச்சிறப்பாக விளையாடி இப்போது வரை புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நேற்று கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியை அந்த அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அந்த அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸின் பங்கு மிக முக்கியமானது. 33 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.
போட்டிக்குப் பின் பேசிய கோலி டிவில்லியர்ஸ் போன்ற ஒரு வீரர் ஃபார்முக்கு வந்துவிட்டார் என்றால் அவரைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாது எனக் கூறியுள்ளார்.