வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (16:39 IST)

வினேஷ் போகத் விவகாரம்.! ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு.! சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம்..!

Vines
வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று  சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவின் மிகவும் நம்பிக்கையான மல்யுத்த வீராங்கனையாக கடந்த சில ஆண்டுகளாக வலம் வருபவர் வினேஷ் போகத். இரண்டு உலக சாம்பியன்ஷிப், மூன்று காமன்வெல்த் போட்டிகள் மற்றும் 8 ஆசிய சாம்பியன்ஷிப் பதக்கங்களுடன் வலம் வந்த வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பி தொடரில் பெண்களுக்கான 50 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்த பிரிவில் பங்கேற்றார். 
 
முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்த அவர், பதக்கத்தையும் உறுதி செய்தார்.  ஆனால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக பாரிஸ் ஒலிம்பிக் குழு அறிவித்தது.  இறுதிப் போட்டிக்கு முன்பு உடல் எடையை சோதனை செய்தபோது, 100 கிராம் கூடுதலாக இருந்ததால், அவரை தகுதி நீக்கம் செய்வதாக ஒலிம்பிக் குழு விளக்கம் அளித்தது.

 
தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்தும், தனக்கு வெள்ளி பதக்கம் வழங்க கோரியும்  சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாரிஸ் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று  சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.