வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (21:03 IST)

’தல’யை கெளரவப்படுத்த ‘தளபதி’ பாடலை போட்ட சிஎஸ்கே அணி நிர்வாகம்

தல தோனியை கவுரவப்படுத்த தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ பாடலை சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் தருவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வாத்தியாரான தல தோனிக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கும் வகையில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற பார்த்து ’வாத்தி கம்மிங்’ பாடலுடன் கூடிய தோனியின் காட்சிகள் கொண்ட வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது
 
இந்த வீடியோவுக்கு தோனியின் ரசிகர்கள் மற்றும் தளபதி விஜய்யின் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருவதோடு, வீடியோவை வைரலாக்கியும் வருகின்றனர்.,