வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (16:27 IST)

கோவிட் 19 தடுப்பூசி சென்னைக்கு வருகை… முதல் பரிசோதனை யாருக்கு?

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கோவிஷீல்டு தடுப்பு மருந்து சென்னைக்கு பரிசோதனைக்காக வர வைக்கப்பட்டுள்ளன.

உலகளவில் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து பல நாடுகளும் கண்டுபிடிக்கப்பட முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் Oxford பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு எனும் மருந்து பரிசோதனை அளவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து இந்த மருந்துகள் இப்போது சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தைப் பயன்படுத்த சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த மருந்துகளை யாருக்கு முதல் பரிசோதனை செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.