செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 ஜூலை 2021 (11:11 IST)

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி; இறுதி சுற்றில் இந்திய வீரர்!

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபில் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி அபாரமான திறமையை வெளிப்படுத்தி தகுதி பட்டியலில் மூன்றாம் இடத்தை அடைந்துள்ளார். இதனால் நேரடியாக இறுதி சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளார்.