செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (07:58 IST)

இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி: பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் இங்கிலாந்து சமாளிக்குமா?

பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் இங்கிலாந்து சமாளிக்குமா?
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடர்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த 5ஆம் தேதி தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறும் நிலை இருந்தாலும், இங்கிலாந்து அணி மிக அபாரமாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று செளம்தாம்டன் மைதானத்தில் தொடங்க உள்ளது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் குடும்ப சூழ்நிலை காரணமாக அணியிலிருந்து விலகி உள்ளதால் அவர் இல்லாமல் இங்கிலாந்து அணி 2வது டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள போகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் கிறிஸ் வோக்ஸ், பட்லர் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால் இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் இல்லாமலேயே வலுவான அணியாகவே உள்ளது. ஆண்டர்சன், ஆர்ச்சர் ஆகிய பந்துவீச்சாளர்களும் இங்கிலாந்து அணிக்கு பலம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சும் சுமாராகவே உள்ளதால் இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது