சம்பளத்தில் 15% அபராதம் விதித்த ஐசிசி: இங்கிலாந்து பந்துவீச்சாளர் அதிர்ச்சி

சம்பளத்தில் 15% அபராதம் விதித்த ஐசிசி:
சம்பளத்தில் 15% அபராதம் விதித்த ஐசிசி:
siva| Last Updated: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (20:38 IST)
சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் வெற்றி பெறும் வகையில் இருந்தாலும் திடீரென திருப்பம் ஏற்பட்டு இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இங்கிலாந்து அணி ஒன்று பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஐசிசி விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது

இது குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் ஐசிசி விதிகளை மீறியது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரது சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமும் விதிக்க ஐசிஐசிஐ முடிவு செய்து சற்றுமுன் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :