1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (14:35 IST)

ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்லுமா.. நெதர்லாந்துடன் இன்று மோதல்..!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற  நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளதை அடுத்து அந்த அணி சற்று முன் எட்டு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி மூன்று வெற்றிகள் பெற்று 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால்  ஐந்தாவது இடத்துக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை அடுத்து உள்ள இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால்  அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்ட நெதர்லாந்து அணி இன்று வெற்றி பெற்றாலும்  பிரயோஜனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran