திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 13 ஜனவரி 2019 (11:49 IST)

கேலோ ஜூனியர் போட்டி: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்

கேலோ இந்திய ஜூனியர் போட்டியில் தமிழக வீரர் மற்றும் வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றனர்.
புனேவில் ஜூனியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீராங்கனை ஆட்ரியா தங்கப்பதக்கத்தை வென்றார். அதேபோல் தமிழகத்தை சார்ந்த அரவிந்த், மணிராஜ் ஆகியோர் டிரிபில் ஜம்பில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை பெற்றனர்.
 
இவர்களுக்கு தமிழக அரசு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.