வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 ஜனவரி 2019 (07:23 IST)

ஓடாத படத்திற்கு வெற்றிவிழாவா? ஐஸ்வர்யா ராஜேஷ் யாரை தாக்குகிறார்?

ஒரு படம் வெளியாகிய இரண்டே நாட்களில் சக்சஸ் மீட் கொண்டாடும் வழக்கம் தற்போது கோலிவுட்டில் புதியதாக உருவாகிய நிலையில் 'கனா' படத்தின் சக்சஸ் விழாவில் 'ஓடாத படத்திற்கெல்லாம் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள், ஆனால் இது உண்மையான வெற்றிப்படம் என ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் பேசியபோது, 'இந்த படத்தில் நடித்ததில் என் அம்மாவுக்கு பெரிய மகிழ்ச்சி. படத்தை பார்த்த பிறகு இந்த படத்துக்கு பிறகு நான் நடிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை என்று கூறியதைத்தான் உண்மையான வெற்றியாக நான் பார்க்கின்றேன். பல திரைப்படங்கள் ஓடுதோ இல்லையோ வெற்றி விழா கொண்டாடுவார்கள். ஆனால் இந்த விழா அப்படி இல்லை. இது உண்மையான வெற்றி விழா’ என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

இதனையடுத்து ஒருசில நடிகர்களின் ரசிகர்கள் ஐஸ்வர்யாவை கடுமையாக விமர்சனம் செய்ததால் இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். ஓடாத படத்திற்கு வெற்றி விழா என்று நான் பொதுவாகத்தான் கூறினேன். எந்த படத்தையும் குறிப்பிட்டு கூறவில்லை. நான் கூறிய அந்த வார்த்தை யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.