ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2019 (15:33 IST)

குடும்ப விஷயத்தை வெளியிட்ட நாளிதழ் – கடுப்பான ஸ்டோக்ஸ் !

பென் ஸ்டோக்ஸ் குடும்பத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஒரு மோசமான சம்பவம் பற்றி செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் பென் ஸ்டோக்ஸ் நியுசிலாந்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 30 ஆண்டுகளுக்கு முன்பாக அவரது குடும்பத்தில் நடந்த மோசமான நிகழ்ச்சி காரணமாக அவரது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது.

பென் ஸ்டோக்ஸின் தாயார் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு பென் ஸ்டோக்ஸின் தந்தையை திருமணம் செய்துகொண்டார். இதனால் விரக்தியடைந்த அவர் தனது இரண்டு குழந்தைகளையும் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தைப் பற்றி விசாரித்து சன் நாளேடு செய்தி வெளியிட்டது.

இது சம்மந்தமாக பேசிய பென் ஸ்டோக்ஸ் ’ மோசமான பத்திரிக்கைக் கலாச்சாரம். இதை விமர்சிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை’ எனத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.