ஒலிம்பிக் போட்டி நடப்பது எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

olympic
ஒலிம்பிக் போட்டி நடப்பது எப்போது?
Last Updated: திங்கள், 30 மார்ச் 2020 (17:41 IST)
இந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளதாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் பரிந்துரையை ஏற்று
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமாக கடந்த சில நாட்களுக்கு முன்அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் சரியான தேதி குறித்த அறிவிபை ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அடுத்த ஆண்டு அதாவது 2021ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஐபிஎல் போட்டிகளும் இன்னும் ரத்து என அறிவிக்கப்படவில்லை என்பதால் ஐபிஎல் போட்டிகளின் தேதிகளும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :