வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 8 நவம்பர் 2018 (12:03 IST)

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் : முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கருத்து கூறியிருக்கிறார். 

இலங்கையில் உள்ள மக்கள் அன்றாடம் உணவும்,உடையும் கல்வியும் வேண்டி நிற்கிறார்கள் அப்படியிருக்க பாராளூமன்றத்திற்கு தமது பிரதிநிதிகளை மக்களிடமிருந்து  தேர்ந்தெடுத்து அனுப்புவது என்பது எதிர்பார்க்க முடியாது ஒன்று என முத்தையா முரளிதரன் கூறியிருக்கிறார்.
 
மேலும் அவர் கூறியதாவது:
 
தமிழர்கள் தம்ங்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவது அவர்களின்  உரிமை!ஆனால்
ஆனால் எங்கள் நாட்டில் இருப்பவர்கள் 80 சதவீதத்திற்குமேல் சிங்கள பவுத்தர்களே!!
 
நான் கிரிக்கெட்டில் திறமையாக செயல்பட்டதால் மூன்று இன மக்களும் என்னை ஏற்றுக்கொண்டு விட்டனர்.என் விளையாட்டிற்கும் அது உற்சாகமாக இருந்தது.
 
ஆனால் இன்றை சூழ்நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் அடைப்படைகளை மறந்துவிட்டு ஜனநாயகம் குறித்து பேசிவருகின்றனர். இன்றைய சூழ்நிலைக்கு தேவைதானா?
 
விடுதலிப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த இயக்கம் முதலில் நல்ல நோக்கத்தில் பயணித்திருந்தாலும் கடைசிக்கட்டத்தில் அது பயங்கரவாத இயக்கமாக மாறியது.
 
தற்போது அரசியலில்  நீதிவேண்டி போராட்டக்காரர்களின் பின்னால் செல்பவர்கள் சலுகைக்கும் உணவுக்கும் வேண்டித்தான் செல்லுகின்றனர். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.