காற்றில் மிதக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்… வைரலாகும் வீடியோ

david warner
sinoj| Last Updated: புதன், 17 ஜூன் 2020 (22:41 IST)

ஆஸ்திரெலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்
தனது ரசிகர்களுக்கு அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவார். இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


கொரோனா தொற்று நோயால் உலகம் முழுவதும் பல்வேறுதொழில் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரபல விளையாட்டு வீரர்களும் சினிமா பிரபலங்களும் சமூக வலைதளங்களில்
வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரெலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்
தனது இன்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஒரு மியூசிக்கை ஒலிக்க விட்டுக் கொண்டு, தண்டால் எடுப்பது போல் கைகளைக் கீழே ஊன்றியர் ஒவ்வொரு கையாக மேலே தூக்கி எதையும் பிடிக்காமல் காற்றில் மிதந்தபடி சில நிமிடங்கள் இருந்தார். இந்த வீடியோஒ வைரல் ஆகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :