செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 2 ஜூன் 2020 (13:55 IST)

கொலவெறி பாடலுக்கு டிக்டாக் செய்த டேவிட் வார்னர் - வைரல் வீடியோ!

டிக்டாக்கில் எப்போதும் சினிமா பாடல்களை மரு உருவாக்கம் செய்வதில் பயணர்கள் ஆர்வம் காட்டுவர். அந்தவகையில் ஹிட் அடித்த பாடல்கள் டிக்டாக்கில் ஒரு ரவுண்டு வந்துவிடும். இந்நிலையில் இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு பிடித்த பாடல் பாடுவது , குடும்பத்துடன் நடனமாடுவது, டிக்டாக் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களை நல்ல ஜாலி மூடில் வைத்துள்ளனர்.

அந்தவகையில் ஆரம்பத்திலிருந்தே பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மகள் மற்றும் மனைவியுடன் நடனமாடும் கியூட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அல்லு அர்ஜுனின் புட்ட பொம்மா , தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி, பாகுபலி படத்தின் மாஸ் வசனம், மகேஷ் பாபுவின் "Mind Block" உள்ளிட்ட பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டு தென்னிந்திய ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம்பிடித்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷின் 3 பட "கொலவெறி" பாடலுக்கு அசத்தலாக டிக்டாக் செய்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளி வருகிறார்.