திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (15:43 IST)

’தல’ தோனி பெயரில் பெவிலியன்... ரசிகர்கள் குஷி...

கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அமரவும் ஒய்வெடுக்கவும் பெவிலியன் என்ற பகுதி உள்ளது. இதற்கு தோனியின் பெயர் வைத்துள்ள செய்தி தோனியின் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் தோனி  அறிமுகமானார். பின்னார் தன் விக்கெட் கீப்பிங் மற்றும் தன் பேட்டிங் ஸ்டைலால்  முன்ணி வீரராகி கேப்டனாகவும் உயந்தார்.
 
ஐசிசியின் 3 முக்கிய கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார். தற்போது ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கான மைதானம் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ளது. இந்த மைதானத்தில் உள்ள தென் பகுதிக்கு எம்.எஸ். ஹோனி பெவிலியன்  என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
இதனால் தோனியின் ரசிகர்கள் இதை சமூக வலைதளங்களிலும், ஊரிலும் ஜேஜே என்று கொண்டாடி வருகின்றனர்.