திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 16 ஜனவரி 2021 (10:59 IST)

தாய்லாந்து ஓபன்: 2வது சுற்றோடு நடையை கட்டிய சாய்னா!

இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 2வது சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளார். 

 
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் விளையாடுவதற்காக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிவி சிந்து உள்ளிட்ட வீராங்கனைகள் பாங்காங் சென்றனர். இவர்கள் பாங்காங்கில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். 
 
இதில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில் மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 2வது சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளார். தாய்லாந்தின் புசனனுக்கு எதிராக சாய்னா 23-21, 14-21, 16-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.