இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் ...வேகப்பந்து வீச்சாளர் விலகல்...

australia
Last Modified சனி, 19 ஜனவரி 2019 (18:18 IST)
ஆஸ்திரேலியா அணி இலங்கைக்கு டெஸ்ட் தொடரில்  பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் 24 ல் பிரிஸ்பேனில் நடக்கிறது. இரண்டாவது டெஸ்ட் பிப்ரவரி 1-5 வரை நடக்கிறது.
 
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் நிலையில்  அவர் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.
 
மேலும் ஹேசல்வுட்டுக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் 22 அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளார். இதுவரை இவர் 7 ஒருநாள் , 7 சர்வதேச டுவெண்டி 20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :