திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2017 (05:37 IST)

10 ஓவர் கிரிக்கெட் லீக்: முதல் பந்திலேயே அவுட் ஆன சேவாக்

டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட், டி-20 கிரிக்கெட் வரிசையில் தற்போது 10 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. ஷார்ஜாவில் நடைபெறும் இந்த போட்டி தொடரில் மரதா அரேபியன்ஸ், கேரளா கிங்ஸ், பாக்டூன்ஸ், பஞ்சாபி லிஜென்ட்ஸ், டீம் ஸ்ரீலங்கா, பெங்கால் டைகர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

நேற்று நடைபெற்ற முதல் நாள் முதல் போட்டியில் கேரள மற்றும் பெங்கால் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி, 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் விளையாடிய கேரள அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 90 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மரதா அரேபியன்ஸ் மற்றும் பாக்டூன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் பாக்டூன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மரதா அணியின் கேப்டன் சேவாக் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.