1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (09:19 IST)

இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடர் அணி அறிவிப்பு… 3 தமிழக வீரர்கள் சேர்ப்பு!

இந்திய அணி டெஸ்ட் தொடருக்குப் பின் இங்கிலாந்து அணியோடு 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தலா 1 வெற்றிகளை பெற்று தொடரை சமநிலையில் வைத்துள்ளனர். இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3 தமிழக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணி விவரம்:-
1.விராட் கோலி (கேப்டன்)
2. ரோகித் சர்மா (து.கேப்டன்)
3. கே.எல்.ராகுல்
4. ஷிகார் தவான்
5. ஷ்ரேயாஸ் ஐயர்
6. சூர்யகுமார் யாதவ்
7. ஹர்திக் பாண்ட்யா
8. ரிஷப் பண்ட்
9. இஷான் கிஷன்
10. சாஹல்
11. வருண் சக்ரவர்த்தி
12. அக்ஸர் பட்டேல்
13. வாஷிங்டன் சுந்தர்
14. ராகுல் திவாட்டியா
15. நடராஜன்
16. புவனேஷ்வர் குமார்
17. தீபக் சாஹர்
18. நவ்தீப் சைனி
19. ஷர்துல் தாகூர்