வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2017 (06:32 IST)

கமல்ஹாசன் - சச்சின்அணிக்கு 2வது தோல்வி

கமல்ஹாசன் அம்பாசிடராகவும் சச்சின் தெண்டுல்கர் உரிமையாளராகவும் இருக்கும் தமிழ் தலைவாஸ் கபடி அணி நேற்று இரண்டாவது முறையாக தோல்வி அடைந்தது. இதனால் தமிழக கபடி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.


 
 
நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான புரோ கபடி ஆட்டத்தில் பெங்களூர் அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
நாக்பூரில் நேற்று நடந்த போட்டியில் ஒரு கட்டத்தில் பெங்களூர் அணி 23-8 என்ற புள்ளிக்கணக்கில் முன்னேற்றத்தில் இருந்தது. இதன்பின்னர் எழுச்சி அடைந்த தமிழ் தலைவாஸ் அணியினர் தொடர்ந்து புள்ளிகளை எடுத்தனர் இருப்பினும் இறுதியில் 32-31 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே தெலுங்கு டைட்டான்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது