தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்


sivalingam| Last Modified சனி, 22 ஜூலை 2017 (05:43 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போலவே டி.,என்.பி.எல் என்னும்  தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த போட்டி தொடரில் தூத்துக்குடி, சென்னை, திண்டுக்கல், கோவை, காரைக்குடி, திருவள்ளூர், திருச்சி, மதுரை ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன.


 
 
இன்று தொடங்கும் இந்த போட்டிகள் லீக் போட்டிகள், இரண்டாவது சுற்று மற்றும் அரையிறுதி, இறுதி போட்டி என அடுத்தடுத்த சுற்றுகள் இருக்கும் ஆகஸ்ட் 20ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறவுள்ளது.
 
கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் டி.என்.பி.எல் போட்டியில் சேப்பாக்கம் அணியை 122 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தூத்துக்குடி அணி சாம்பியன்பட்டம் பெற்றது.
 
இன்றைய தொடக்கவிழா போட்டியில் தோனி, ஹைடன் உள்பட முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :