வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 ஏப்ரல் 2021 (18:54 IST)

ஒலிம்பிக்கில் விளையாட தேர்வான தமிழக வீராங்கனை

2021 ஆம் ஆண்டில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க தமிழக வீராங்கனை இளவேனில்வாலறிவன் தேர்வ் செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதிவரை ஒலிம்பிக்-2021 தொடர் நடைபெறவுள்ளது. இதில் விளையாடுவதற்கு இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணியை தேர்வு செய்துள்ளனர். இதில் கடலூரைச் சேர்ந்த தமிழக வீராங்கனை  இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இடம் பிடித்துள்ளார்.
அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.