புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (19:36 IST)

தோனி நடிப்பில்.....IPL T-20 டிரைலர் ..வைரல்

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் டி-20 ஐபிஎல் சீசன் இம்முறை இந்தியாவில் நடைபெற்ற நிலையில்  கொரொனா 2 வது அலை காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

எனவே, மீதமுள்ள போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள டி-20 ஐபிஎல்  தொடரின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் அவருடன் இணைந்து சிலர் நடித்துள்ளனர். இதுவரைக்கும் காணாத தோனியை இதில் பார்ப்பதாகவும் அவர் ஸ்மார்ட்டாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.