இந்திய அணியை முன்னேற்றியது கங்குலியோ தோனியோ இல்லை… சுரேஷ் ரெய்னா சொல்லும் வீரர் யார்?

Last Modified திங்கள், 14 ஜூன் 2021 (09:07 IST)

இந்திய அணியை முன்னேற்றி சிறப்பாக செயல்பட செய்தது ராகுல் டிராவிட் கேப்டன்சியில் தான் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

சுயசரிதை புத்தகத்தை எழுதி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அதில் இருந்து சில பகுதிகளை வெளியிட்டுள்ளார். அதி ஏற்கனவே ‘இந்திய அணிக்கு வெற்றி பெறுவது என்பதையும் அதன் மகத்துவத்தையும் கற்றுக்கொடுத்தார். அவர் விதைதததைதான் நாம் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பழமாக அறுவடை செய்தோம். அவரிடம் இருந்து இளம் வீரர்கள் ஏராளமாகக் கற்றோம்’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னேற்றத்துக்கு காரணம் தோனியோ அல்லது கங்குலியோ அல்ல எனக் கூறி அது ராகுல் டிராவிட்தான் எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக அந்த புத்தகத்தில் ‘டிராவிட்தான் அணியை ஒரு குடும்பம் போல நடத்தினார். ஜூனியர் வீரர்களுக்கான உரிமைக்காக அவர் போராடினார். நாங்கள் எல்லாம் அவர் கேப்ட்ன்சியில் முதிர்ச்சி அடைந்தவர்கள்தான். நாங்கள் இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருப்போம் என அவர் நம்பினார். வலிமையான இந்திய அணியை தோனியோ, கங்குலியோ உருவாக்கவில்லை. அவர்கள் இருவரும் தாக்கம் செலுத்தினர். மூன்று வடிவங்களிலும் சிறந்த அணியை டிராவிட்தான் உருவாக்கினார்’ எனக் கூறியுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :