பாமகவால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை… அதிமுக செய்தி தொடர்பாளர் கடுப்படிப்பு!
அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பாமகவால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை எனக் கூறியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் இருந்து பாமக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக எந்த திராவிடக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை என்று கூறியிருந்த பாமக, அதிமுகவினரை டயர்நக்கிகள் என்றும் அவர்களுக்கு ஆட்சி நடத்தவே தெரியாது என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில் அதிமுக கூட்டணி, மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் இரண்டிலும் தோல்வியடைந்த நிலையில் இப்போது அதிமுகவையும், அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தையும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். இந்நிலையில் அவருக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி அன்புமணி தேவையில்லாம ஓபிஎஸ் குறித்து பேசி வருகிறார். அவர்களால் எங்கள் கட்சிக்கு எந்த பயனும் இல்லை. நாங்கள் வென்ற தொகுதிகளில் அவர்களுக்கு எந்த பங்கும் இல்லை எனக் கூறியுள்ளார்.