திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By
Last Updated : வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:48 IST)

இன்றைய போட்டியில் வென்றால் முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லலாம்… சி எஸ் கே ரசிகர்கள் ஆவல்!

நடந்து வரும் ஐபிஎல் தொடரில் சி எஸ் கே மிக சிறப்பாக விளையாடி வெற்றிகளைக் குவித்து வருகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த 3 போட்டிகளையும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நெட் ரன்ரேட்டும் மிகச் சிறப்பாக வைத்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை வெற்றிக்கொள்ளும் பட்சத்தில் அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றுவிடும். இதற்காக இந்த போட்டி சென்னை அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.