மாநில அளவிலான ஹாக்கி போட்டி! – 22 அணிகள் பங்கேற்பு!
சிவகங்கையில் நேற்று துவங்கிய மாநில அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மூன்று தினங்கள் நடைபெற்றது.
சிவகங்கை சேர்ந்த மாநில ஹாக்கி வீரர் ராஜேஷ்வரன் நினைவாக சிவகங்கை யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் இந்த போட்டியினை சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தியது.
இந்த ஹாக்கி போட்டியில் தமிழக முழுவதும் இருந்து தலைசிறந்த 22 அணிகள் பங்கேற்கின்றன இதில் சென்னை, விழுப்புரம், இராஜபாளையம், கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, ஊட்டி, பாண்டிச்சேரி, காரைக்குடி, தர்மபுரி, மதுரை, புதுக்கோட்டை, ஆற்காடு, கோவில்பட்டி, போன்ற ஊர்களில் இருந்து அணிகள் பங்கேற்று விளையாடினர்.
இந்த போட்டிகள் நாக்அவுட் முறையில் நடைபெற உள்ளது. வெற்றி பெறும் அணிகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும், ராஜேஸ்வரன் நினைவு சுழற் கோப்பை மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது.
இன்று நடை பெற்ற இந்த போட்டியில் பாண்டிச்சேரி அணி ஊட்டி அணியையும், மதுரை திருநகர் அணி கோவில்பட்டி அம்பேத்கர் ஹாக்கி அணியையும், கோவில்பட்டி எஸ் எஸ் டி எம் கல்லூரி அணி சென்னை விளையாட்டு மேம்பாட்டு அணியையும், சிவகங்கை யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் அணி விழுப்புரம் அணியையும், ராஜபாளையம் அணி மதுரை அருளானந்தர் கல்லூரி அணியுடன் விளையாடி வெற்றி பெற்றது.
தொடர்ந்து இந்த போட்டிகள் நாளை காலை அரை இறுதிப் போட்டிகளும் அதனைத் தொடர்ந்து இறுதி போட்டிகள் நாளை மாலை நடைபெற்று பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.