1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (18:44 IST)

2023ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு! முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது!

Shami
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி மற்றும் இந்திய அணி பந்துவீச்சாளர் முகமது சமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


 
ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு துறையில் சாதனை புரிபவர்களுக்கு மத்திய விளையாட்டு துறை சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2023ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பேட்மிண்டன் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ராங்கிரெட்டி சாத்விக் சாய்ராஜ் ஆகியோர் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் முகமது ஷமி மற்றும் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி  உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 2024 ஜனவரி மாதம் 9ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.