செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (14:40 IST)

மலிங்கா தலைமையில் களமிறங்கும் இலங்கை; முந்திக்கொண்ட இந்தியா

இலங்கை அணி தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வரும் நிலையில் இன்று நான்காவது ஒருநாள் போட்டியில் மலிங்கா தலைமையில் இந்தியாவுடன் மோதுகிறது.


 

 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது, முதல் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று நான்காவது போட்டி நடைபெறுகிறது. இதில் இலங்கை அணிக்கு மலிங்கா புதிதாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தரங்காவுக்கு கிரிக்கெட் வாரியம் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மூன்றாவது போடியில் களமிறங்கிய கேப்டன் காயம் காரணமாக விலகிக்கொண்டார்.
 
யார் கேப்டனாக களமிறங்கினாலும், நாங்கள் அடித்து தும்சம் செய்வதை நிறுத்த மாட்டோம் என்பது போல் இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்னும் சிறிது நேரத்தில் நான்காவது ஒருநாள் போட்டி தொடங்க உள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
வழக்கமாக டாஸ் வென்றாலும் இரண்டாவது பேட்டிங்கை தேர்வு செய்து வந்த இந்திய அணி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. மலிங்கா இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர், கட்டாயம் இரண்டாவது பேட்டிங் செய்யும் போது நெருக்கடி கொடுப்பார்.
 
மேலும் இந்த மைதானம் முதலில் பேட் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். பந்து ஸ்விங் ஆவது மிக குறைவு. இதையெல்லாம் கணித்தே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.